திங்கள், 18 டிசம்பர், 2023

நீ ரோடு பழகு

 




உயிர்விழித்து மண்ணும் சிவந்தது
பயிர்விளித்து நீரோடு பேசியது
வயலுக்கு வந்தான் கதிரவன்
தாயும் தம்மகனின் செவிக்கு தங்கத்தோ டணிவித் தலங்கரித்தாள்
கேட்பதெலாம் நெஞ்சில் தங்குவதற்கு
தரையில் மெல்ல நடந்தான்
புள்ளும் முள்ளும் கூட
மெல்ல முரசு கொட்டின
அவனடி பாதம் மயங்கின
அறிவாள் பார்த்தவன் சுயமிழந்தான்
எங்கிருந்து வந்தாள் என்று
தங்க நெஞ்சம் முழுதும்
பொங்கி வந்த கேள்வியை
அங்கொரு பொழுதில் கதிரவன்
அறிவாளிடம் கேட்டே விட்டான்
பின்பவன் வாளை விடாது
பின்தொடர்ந் திடைவிடாது நெருங்கி
வந்து வந்து முகர்ந்தான்
அதனால் அறிவாள் நெஞ்சில்
மதனம் பாய்ந்தது மேலும்
மின்னலிடை மடிப்பு தொலைத்தாள்
பசலை நோயும் கொண்டாள்
அந்த வைகறையில் வந்தவள்
மந்தமாய் மறைந்து போனாள்
அவளை தேடி புறப்பட்டான்
குவளை நீரை விட்டு
துள்ளி குதிக்கு மருவியைத்
தேடி குதூகலமாய் புறப்பட்டான்
முன்பே நீரோடு பழகியவன்
என்பதால் மகிழ்ச்சியோடு பிரவேசித்தான்
கருப்பனின் தோளில் சாய்ந்த
கதிரவனின் கண்ணில் தென்பட்டது
உடைவிடத்தில் பதுங்கி இருந்த
திடகாத்திட கருக்கருவாளின் கொண்டைமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூரிய பார்வை

  அந்த வீதியில் வீடெலாம் வானை முந்தி முன்னேறும் முகத்தைத் காண  தொந்தி மனிதரும் வளைந்து நின்று அந்தி வெயிலை வேடிக்கை பார்ப்பர் சந்திர நாயகனும...