திங்கள், 18 டிசம்பர், 2023

சூரிய பார்வை

 அந்த வீதியில் வீடெலாம் வானை

முந்தி முன்னேறும் முகத்தைத் காண 
தொந்தி மனிதரும் வளைந்து நின்று
அந்தி வெயிலை வேடிக்கை பார்ப்பர்
சந்திர நாயகனும் வெட்ட வெளிதனை
நொந்தபடி வெறித்து வெறித்து பார்த்தான்
வெந்து போன உடம்போடு நிற்குலைந்தான்
பந்தி போடும் புல்தரை கொண்ட 
சந்திப் பூங்காவில் சிவந்த தன்னெஞ்சால்
சிந்தை தடுமாற சுற்றிச் சுற்றி
வந்தான் பெயருக் குடற்பயிற்சி கொண்டான் 
அந்த நேரத்தில் அடங்காத அழகோடு
அருந்து வந்து சென்றவளை கண்டான்

குனிந்த தலையோடு பூமி பார்த்து மெலிந்த இடையொடு நடந்து வந்தாள்
அன்ன நடையில் பைய்ய நடந்தவள் பின்னல் உடைய கூந்தலைக் காட்ட
மின்னலோடு மழையுடன் கூடிய புயலவன் 
சின்னஞ்சிறு நெஞ்சை தாக்க தாங்காமல்
முன்னேறி சென்று வழிமறித்து நின்றான்
பின்னால் தடாலென திரும்பி கைநீட்டி 
கன்னியவளை நோக்கி முள்ளுமலர் தந்து
தன்னுள் தோன்றிய 
காதலை சொல்லி 
வானைப் போல நானில்லை கண்ணே 
நாணும் நின்னை நிமிர்ந்தே நோக்குவேன் என்று
வானைப் போல நடந்து வந்தவளை 
வாளைப் போல நோக்கியவன் சொன்னான்
பொன்னையன் போல பொங்கி நின்று
பெண்ணவளின் பொன்னடிக்கு காத்திருந்தான்

வானவா என்னுள் இல்லாத காதலை தானாய் வந்து சொல்லி நிற்கிறாய் 
தேனை சிந்தும் புவிமலர் போல
நானாய் நானிருக்கிறேன் என்னை விட்டுவிடு
வீணாய் தலைகவிழ்ந்து மதுவை ஊற்றாதே
என்றாழ்ந்தாள் வென்ற வாயும் மூடுமலராய் 
சென்றோர்ந்தாள் வாள்வீசும் கண்ணுடைய வேந்தே
வானைப் போல வாழ விடுவென்னை 
என்றாகிலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன்
என்றன் அருகில் உன்றன் அழகை
குன்ற செய்து நிற்புகழ் இழக்காதே
இன்னும் ஒன்று சொல்லி ஒப்புக்குறேன்
இன்றோடு உன்வாழ்வில் போராட்டம் நின்றாடும் என்றந்தையு முன்னை கருவைத்து என்னை பின்தொடரும் வானவரை வைத்திருப்பார் 
அன்றலர்ந்த சூரியனாய் திரிகின்றாய் கவணங்கொள்

காதலித்து வாழ்வை  என்னைக்இழக்காதே
உன்னுயிர் உன்னுடலை நீங்கும்படி செய்தால்
உங்காதலை நானெங்கு கொண்டுபோய் என்செய்வேன்
அன்னாந்து பார்ப்பதால் வேறு பூமியை
உன்னால் காண இயலும் ஆனால்
என்னால் தந்தையை நோக்கி வாழ்வேன் அன்றி
எந்நாளும் மற்றவரை தூண்டவு மற்றேன் 
உன்னை முன்னைக் கண்டதும் இல்லை 
அன்னைக்கு தம்பி போலவும் நீ இல்லை
பின்னை என்செய்வேன் விடைசொல் வீரா

தேனுடைய கோதைநின் காதிலே என்னுடைய
வானுயர காதலை சொன்னேன் ஆனாலும் 
வாழ்வு முழுதும் ஒருபோதும்
நானுயரப் 
போவ தில்லையென தெளிந்த நீரோடை 
போல சொல்லி நிற்கிறாய் பெண்ணே
நீருக்குள் காதல் தெளிவாய் தெரிகிறது
போருக்குள் பொதிந்து கிடக்கும் குருதியும் 
பாருக்குள் பதுங்கி கிடக்கும் மதுவும் 
பேருக்கு கூட செம்மை யாகாது
மேக குழிக்குப் பின்னிருந்து தாக்கும் 
மோகங் கொழிக்கும் பொன்னிற படைனின்று
வேகமெடுத் தென்னை தாக்கினால்
வீழ்வேனென்று 
தேவை இல்லாது நினைத்து பயப்படாதே
பூவை உன்னில் காதல் கொண்டதால்
சேவை செய்யும் பாங்கில் உன்னடிமையாம்
நானின்று முதலென்றும் உன்வசம் ஆவேன்
கண்ணசைவில் முடிந்த வரையில் 
மோதி பார்ப்பேன் சாதிக்கப் பிறந்தவன்
நீமட்டும் என்னில் தீவைத்திடு ராக்கெட்டை
போல நானொரு கணத்தில் வேகமெடுப்பேன் 
பகலவன் பாலவன் எல்லோரும் ஓடி
ஒளிந்து கொள்வர் எங்கேனும் இருட்டில்
தெரிந்திடின் தேடி கண்டு பிடித்து நொறுக்கி விடுவேன் காரணம் உன்மீது
செருக்கோடு நாங்கொண்ட காதல் விடாது
எனக்குள் பயமெனும் எல்லை இல்லை
புயலுக்கு பின்னயனும் சலனம் கொள்வான்
அதுபோல காதல் கொண்டேன் அதனால்
நானும் சும்மா இருக்க மாட்டேன்
மூளைக்குள் பித்து சுரபியும் சும்மா
மூலைக்குள் முடங்கி விடாது கவனம்கொள்
இவ்வளவு சொல்லியும் எதையும் கேளாது
விருட்டென நடையைக் கட்டினாள் 

சூரியனின் வேலையாள் நெருப்புக் குதிரையில்
சீர்வாளுடன் வந்தவன் சந்திரன் முகத்தை
மேகச் சுவரில் தோய்த்து இழுத்தபடி
வாகனத்தை வேகமாய் விரட்டி சென்றான்
வாகனவா என்றுவழி மறித்து காற்றும்
விரைந்து தோன்றி குறுக்கிட்டு நின்றது
அரசின் மேக சுவரை சிதிலம்
அடைய செய்தாய் அதனால் அபய
தொகையாய் கையோடு வந்த சந்திரனை
வாகனத்தில் என்று  காற்றென்னுள்
ஒப்படைத்து 
வெட்ட வெளியில் ஓடிவிடு என்றது
வெட்டியாய் காற்றோடு வந்த தூசியும்
வாகன வில்லென வளைந்து நின்று
தேக பணங்கட்ட சொன்னது பின்பது
வாகன சாவி திருகி எடுத்து
பரிசொடு வாகனத்து வந்தால் நல்லது
பரிசில் தோன்றா திருந்தால் கைதாவாய்
இத்தனையும் காற்றும் தூசும் சொல்ல
பித்தனைப் போல வானான் சூரிய வேலவன்
முகமது சுருங்கியது கரமது துடித்தது
உடம்பது வேலென மருவியது மயங்கரு 
நிலையில் தூசுகாற்றை நாணாக்கி
நின்ற
நிலையில் சந்திரனில் பாய்ந்து செந்திரல்
நெஞ்சை தகர்த்து சேந்திரம் முகர்ந்தது
புஞ்சை நிலத்தில் சந்தி சாய்ந்தான்
நீல மெய்திய சூரிய கோளை
தீரா வலியோடு கையில் எடுத்து
சேர நிலத்தில் வீசி எறிந்தான்
சூரர் கூட்டத்தின் பின்னே சீரழகு
சூழ்ந்திரு கன்னியவள் மனதோடி வந்தாள்
வழிதொறும் கல்லும் முள்ளும் கண்முன் 
வழியாது கைகால் முழுதும் சிராய்ப்பால்
அலம்பிய குருதியோடு விழுந்த சந்திரனை
கலங்கிய நெஞ்சடியில் தாங்கி சரிந்தாள்
தலைகவிழ்ந்து சந்திரன் முகத்தில் தங்கண்வழி
அழுகுமது ஊற்றி அவங்காவில் 
தங்காதல் 
மெழுகேற்றி சொல்லாமல் சொல்லி 
வழிந்தோடினாள்
அந்த பெண்ணை கண்டு வேலையன் 
சிந்தை செய்தான் விந்தையென விளித்தான்
அழுக்கு படிந்த அழுகும் முகத்திலும் 
உலுக்கும் காதல் மலருமோ குளிருமோ
சூரிய கடவுளின் மகளும் இதுபோல்
தூரிகை வீட்டில் கண்கலங்கி கொண்டிருப் பாரோ வென்று நெஞ்சோர்ந்தான் வேலையாள்
சந்திரன் சந்தடியில் மெல்லப் பேசினான்
சந்த மிசைக்கும் காற்றே பேசு
அந்த கன்னி கடவுள் மகள்தானே
அந்து போவாளோ வழித்தடம் பிறழ்வாளோ 
தம்மகள் மீது தன்னம்பிக்கை இல்லை
என்றால் எம்முயிர் என்செய்யும் சொல்லு 
காதலோடு நாணும் முன்பே நானருந்தேனே
மோதி விளையாடும் மேகம் கூடவெண்
முகத்தை கூறு போட்ட தேனோ
பூமி பார்த்து நடந்து வந்தவள்
பொய்யாய் கூட வானை நிமிர்ந்து 
பார்க்காது வானை வளறுத்த தேனோ
நீலம் எய்தியது சூரியன் தானே
வானம் என்செய்தது 
மேக சுவரில் சாயம் பூசியது
வேற்கதிர் தானே வாகனத்தில் என்றால் வந்து என் செய்வேன்
உலகமே குருடாகும் ஞாயிறு இல்லை என்று கர்வம் கொண்டாள்
சந்தியில் வரும் சந்திரன் என்செய்வான்
பண ஒளி கொண்டதால் சிவப்பும் பொலிவும் அழகென்றால் நான் என் செய்வேன்
பணத்தின் பகட்டு மணத்தின் முகம் காட்டாது
சூரனை போற்றும் தூரிகையே
கடவுளைப் போற்றும் குள்ளர்களே
உங்கள் அறிவு கண் மயங்கியது
உங்கள் அரசி தன்னிலை மறந்தாள்
எங்கதல் அறிநிலை கடந்தாள் வழி தோறும் இடறி விழுந்தாள்
குழி தோறும் உடம்பில் விழுப்புண் 
பெற்றாள் பின்பு நல்ல பெற்றம் போல் என்னையும் பெற்றாள்
விண்ணைத் தாண்டியும் என்னைத் தாங்கினாள்
தாங்கியவள் தங்கமாய்ச் சொல்லுகிறாள்
இவற்றை எல்லாம் கேட்டு கொண்டிருந்த
கதிரவன் கண்ணசந்து துணுக்கு குழியில் 
விழுந்தவன் விழித்து எழுந்தான்
திடுக்கிட்டான் இதுவரை தான் கண்டது கனவா என திகைத்தான் எழுந்து நின்றான் வானை நோக்கி தலை நிமிர்ந்தான் அங்கு அவன் கண்ட காட்சிகள் சில இடம் பெற்றிருக்க இந்த திகைப்பிலிருந்து மீளாது மயங்கரு நிலையில் அந்த பூங்காவிலிருந்து புறப்பட்டான்


































நீ ரோடு பழகு

 




உயிர்விழித்து மண்ணும் சிவந்தது
பயிர்விளித்து நீரோடு பேசியது
வயலுக்கு வந்தான் கதிரவன்
தாயும் தம்மகனின் செவிக்கு தங்கத்தோ டணிவித் தலங்கரித்தாள்
கேட்பதெலாம் நெஞ்சில் தங்குவதற்கு
தரையில் மெல்ல நடந்தான்
புள்ளும் முள்ளும் கூட
மெல்ல முரசு கொட்டின
அவனடி பாதம் மயங்கின
அறிவாள் பார்த்தவன் சுயமிழந்தான்
எங்கிருந்து வந்தாள் என்று
தங்க நெஞ்சம் முழுதும்
பொங்கி வந்த கேள்வியை
அங்கொரு பொழுதில் கதிரவன்
அறிவாளிடம் கேட்டே விட்டான்
பின்பவன் வாளை விடாது
பின்தொடர்ந் திடைவிடாது நெருங்கி
வந்து வந்து முகர்ந்தான்
அதனால் அறிவாள் நெஞ்சில்
மதனம் பாய்ந்தது மேலும்
மின்னலிடை மடிப்பு தொலைத்தாள்
பசலை நோயும் கொண்டாள்
அந்த வைகறையில் வந்தவள்
மந்தமாய் மறைந்து போனாள்
அவளை தேடி புறப்பட்டான்
குவளை நீரை விட்டு
துள்ளி குதிக்கு மருவியைத்
தேடி குதூகலமாய் புறப்பட்டான்
முன்பே நீரோடு பழகியவன்
என்பதால் மகிழ்ச்சியோடு பிரவேசித்தான்
கருப்பனின் தோளில் சாய்ந்த
கதிரவனின் கண்ணில் தென்பட்டது
உடைவிடத்தில் பதுங்கி இருந்த
திடகாத்திட கருக்கருவாளின் கொண்டைமுடி

ழகாரம்

 


தமிழின் தனிச்சிறப்பே சட்டம்தான்
சமிக்ஞை சொல்லும் சட்டம்தான்
நாமடங்கும் தொண்டையில் தொடங்கும்
நாதமது வேறெங்கும் போகாது
நேராய் விண்ணை முட்டும்
தடாரம் போலங்கிருந்து கொட்டும்
இதோவென் குரலையும் நிறைத்தது
குவாகுவா வென்றலரும் நானும்
குடமுடைத்து வெளிவந்து வந்தேன்
கண்களை எல்லா திசையிலும்
கொண்டு சென்று கண்டுவந்தேன்
கருவிழி ஒருவழியாய் ஒயும்
கணத்தில் நீரினிப் புகட்ட
களைத்த குரலும்  கரைந்தது
எங்கு வந்து சேர்ந்தேன்
தங்கு தடையின்றி பொங்கும்
இங்கா யிங்கா வென்ற
இசையும் திசையில் அசையும்
கண்களு மெச்சில் ஊறும் கைகளை மலரும் வாயிக்
கருகில் கொண்டு சென்று
விழுந்தேனில் வருந்தேன் என்று
அழுது அழுது உழுதேன் 
 

சூரிய பார்வை

  அந்த வீதியில் வீடெலாம் வானை முந்தி முன்னேறும் முகத்தைத் காண  தொந்தி மனிதரும் வளைந்து நின்று அந்தி வெயிலை வேடிக்கை பார்ப்பர் சந்திர நாயகனும...