அந்த வீதியில் வீடெலாம் வானை
குறுந்தமிழ்
திங்கள், 18 டிசம்பர், 2023
சூரிய பார்வை
நீ ரோடு பழகு
பயிர்விளித்து நீரோடு பேசியது
வயலுக்கு வந்தான் கதிரவன்
தாயும் தம்மகனின் செவிக்கு தங்கத்தோ டணிவித் தலங்கரித்தாள்
கேட்பதெலாம் நெஞ்சில் தங்குவதற்கு
தரையில் மெல்ல நடந்தான்
புள்ளும் முள்ளும் கூட
மெல்ல முரசு கொட்டின
அவனடி பாதம் மயங்கின
அறிவாள் பார்த்தவன் சுயமிழந்தான்
எங்கிருந்து வந்தாள் என்று
தங்க நெஞ்சம் முழுதும்
பொங்கி வந்த கேள்வியை
அங்கொரு பொழுதில் கதிரவன்
அறிவாளிடம் கேட்டே விட்டான்
பின்பவன் வாளை விடாது
பின்தொடர்ந் திடைவிடாது நெருங்கி
வந்து வந்து முகர்ந்தான்
அதனால் அறிவாள் நெஞ்சில்
மதனம் பாய்ந்தது மேலும்
மின்னலிடை மடிப்பு தொலைத்தாள்
பசலை நோயும் கொண்டாள்
அந்த வைகறையில் வந்தவள்
மந்தமாய் மறைந்து போனாள்
அவளை தேடி புறப்பட்டான்
குவளை நீரை விட்டு
துள்ளி குதிக்கு மருவியைத்
தேடி குதூகலமாய் புறப்பட்டான்
முன்பே நீரோடு பழகியவன்
என்பதால் மகிழ்ச்சியோடு பிரவேசித்தான்
கருப்பனின் தோளில் சாய்ந்த
கதிரவனின் கண்ணில் தென்பட்டது
உடைவிடத்தில் பதுங்கி இருந்த
திடகாத்திட கருக்கருவாளின் கொண்டைமுடி
ழகாரம்
சமிக்ஞை சொல்லும் சட்டம்தான்
நாமடங்கும் தொண்டையில் தொடங்கும்
நாதமது வேறெங்கும் போகாது
நேராய் விண்ணை முட்டும்
தடாரம் போலங்கிருந்து கொட்டும்
இதோவென் குரலையும் நிறைத்தது
குவாகுவா வென்றலரும் நானும்
குடமுடைத்து வெளிவந்து வந்தேன்
கண்களை எல்லா திசையிலும்
கொண்டு சென்று கண்டுவந்தேன்
கருவிழி ஒருவழியாய் ஒயும்
கணத்தில் நீரினிப் புகட்ட
களைத்த குரலும் கரைந்தது
எங்கு வந்து சேர்ந்தேன்
தங்கு தடையின்றி பொங்கும்
இங்கா யிங்கா வென்ற
இசையும் திசையில் அசையும்
கண்களு மெச்சில் ஊறும் கைகளை மலரும் வாயிக்
கருகில் கொண்டு சென்று
விழுந்தேனில் வருந்தேன் என்று
அழுது அழுது உழுதேன்
வியாழன், 13 ஜூலை, 2023
பஞ்சவணம்
நான்கு குழந்தைகளும் நானும் வரேன் வரேன் என்று வரிசைக் கட்டி நிற்க முத்து மாணிக்கம் கருப்பு பாண்டி
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021
மேகாயணம்
மேக வாகனம் வேகமா போகுதே போகும் வாகனத்தை காணும் கண்கள் அசையாமல் நிற்கிறதே. அங்கே இருவகை மேகம் வரிசை கட்டும்
வெண் மேகம் வந்தால் தெளிந்த வானம் தெரியும்
கரு மேகம் எனில் மழைதனை கடத்தும் இராவணம ஆகும் மேகம்
இதனிடையில் கண் கூசும் மஞ்சள் பெரு வெயில் தந்து கொஞ்சும் கதிரவன் குளுகுளு கேரவனில் புகுந்தது போல புது நிலவாய் பிறப்பெடுத்தால் குழம்பும் மேகம் தான் கடத்தி வந்த கிடுபிடியில் இருந்து தப்பித்த மழைத்தேனோ அது. அது தானா கசிந்துரு கியதோ வென்று மேகமது ஐயம் கொளும் முன்பே கைதான தேனரசியை கை தாங்க தூக்க முடிய வில்லையா என்று ஏளனம் பேசும் வானம் முன்பு கூனி குறுகி நில்லாது அஞ்சலை கொண்டு மிஞ்சும் பஞ்சுதலை மறைய வஞ்சனை தந்து விஞ்சுதலை தாண்டி சென்றது
அது வரை மேக பிடியில் விரவ தாகத்தில் மயங்கிய தேன் துளி விழி திறந்து மழை என விழுந்து தப்பித்தாள். தன் தலைவனை தேடினாள். தன்னைக் காணாது இந்நேரம்
அவன் தலையில் பேரிடி விழுந்திருக்குமே அவன் கால்கள் ஓயாது புவியின் அடி வரை துலாவிக் கொண்டிருக்குமே என்று என்ன செய்வதென்று தெரியாது அந்த தேன் மழையரசி புவி தாள் விழுந்தாள் அங்கிருந்த வானுயர் மலை தாவி அன்பை மட்டும் நிறைத்து வைத்திருந்த அவளின் குளிரும் தன்மை தூள் தூள் ஆனது பின்பு நீள் கொடி என்று மலை முடியும் அடியில் சேர் சேர் என்றும் சல சல வென்றும் கூவி கூவி மண்ணை எழுப்பினாள். எப்பொழுதும் விழித்திருக்கும் மண் துகள்களின் முன் நின்று கேள்விக் கணைகளைக் கண்ணால் காட்டினாள் இரு கரமதன் பத்து விரலும் ஆர் என்று ஆர்ப்பரித்த தன் தலைவனைப் பார் என்று பறை பறைந்தது அவள் நெஞ்சு அவள் உடம்பு காயம் படபட படும்வலி கூட பெரும் வலி எனத் தெரிய வில்லை தலைவனின் வலியை மீளா பெரும் வழியாக துடித்தாள். தன்னைத் தேடி தண்டலைவன் வரும்படி வண்டலை தடயமாய் தந்து விட்டு அடுத்து ஓடிக் கொண்டே இருந்தாள்.
சூரிய பார்வை
அந்த வீதியில் வீடெலாம் வானை முந்தி முன்னேறும் முகத்தைத் காண தொந்தி மனிதரும் வளைந்து நின்று அந்தி வெயிலை வேடிக்கை பார்ப்பர் சந்திர நாயகனும...