திங்கள், 18 டிசம்பர், 2023

ழகாரம்

 


தமிழின் தனிச்சிறப்பே சட்டம்தான்
சமிக்ஞை சொல்லும் சட்டம்தான்
நாமடங்கும் தொண்டையில் தொடங்கும்
நாதமது வேறெங்கும் போகாது
நேராய் விண்ணை முட்டும்
தடாரம் போலங்கிருந்து கொட்டும்
இதோவென் குரலையும் நிறைத்தது
குவாகுவா வென்றலரும் நானும்
குடமுடைத்து வெளிவந்து வந்தேன்
கண்களை எல்லா திசையிலும்
கொண்டு சென்று கண்டுவந்தேன்
கருவிழி ஒருவழியாய் ஒயும்
கணத்தில் நீரினிப் புகட்ட
களைத்த குரலும்  கரைந்தது
எங்கு வந்து சேர்ந்தேன்
தங்கு தடையின்றி பொங்கும்
இங்கா யிங்கா வென்ற
இசையும் திசையில் அசையும்
கண்களு மெச்சில் ஊறும் கைகளை மலரும் வாயிக்
கருகில் கொண்டு சென்று
விழுந்தேனில் வருந்தேன் என்று
அழுது அழுது உழுதேன் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூரிய பார்வை

  அந்த வீதியில் வீடெலாம் வானை முந்தி முன்னேறும் முகத்தைத் காண  தொந்தி மனிதரும் வளைந்து நின்று அந்தி வெயிலை வேடிக்கை பார்ப்பர் சந்திர நாயகனும...